Published Date: September 7, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES

வி.ஐ.டி சென்னை பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் ஜி.பி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கவுரவ விருந்தினராக சென்னையில் உள்ள வங்கதேச நாட்டின் துணை தூதரகத்தின் துணைத் தூதர் ஷெல்லி சலேஹின் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் 39 மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்கள் உட்பட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் வேலை மற்றும் திறன் மேம்படுத்துவது மட்டும்மே கல்வியாக இருக்கிறது அதை சற்று மாற்ற வேண்டும்.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற துறைகள் இருப்பது மிக முக்கியம். நம் வாழ்வில் எந்த வெற்றியும் நிரந்தரமல்ல எந்த தோல்வியும் ஈடு செய்ய முடியாதது அல்ல. எனவே மாணவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியைப் பெற்றாலும் பணிவுடன் இருக்க வேண்டும். தோல்வியடைந்தாலும் துவண்டு போகக்கூடாது என்றார்.
வி.ஐ.டி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசும்போது, உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவீதம் மட்டுமே. அது 50 சதவீதமாக உயர வேண்டும். உயர்கல்வி மூலம் மட்டுமே 2047க்குள் இந்தியா உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் வருமான வரி செலுத்துகிறார்கள்.அமெரிக்காவில் 43 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துகிறார்கள், சீனாவில் 10% பேர் வருமான வரி செலுத்துகிறார்கள். இந்தியாவில் தனிநபர் வருமானம் 2800 டாலர்கள் அல்லது 2900 டாலர்கள் மட்டுமே ஆனால் அமெரிக்காவில் இது 89,000 டாலர்கள் மற்றும் ஜப்பானில் 36,000 டாலர்கள். மாணவர்கள் இந்தியாவில் முதலீடு செய்து நிறுவனங்களை தொடங்குங்கள், அப்போதுதான் இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக மாறும் என்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 6,468 இளங்கலை முதுகலை மாணவ மாணவிகள் 113 ஆராய்ச்சி மாணவ மாணவிகள் என மொத்தம் 6,581 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Media: DAILYTHANTHI